இரண்டு நிமிட வாசிப்பில் இன்றைய நிகழ்வுகள்...
வெங்காய விலை புதிய உச்சத்தைத் தொட்டிருக்கும் நிலையில், மக்களவையில் இன்று வெங்காய விலை உயர்வு குறித்து தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே கேள்வி எழுப்பினார். அப்போது, ''நீங்கள் வெங்காயம் சாப்பிடுவீர்களா?'' என்று மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனைப் பார்த்து கேள்வி எழுப்பினார். இதற்குப் பதில் அளித்த நிர்மலா சீதாராமன், ''வெங்காயமே சாப்பிடாத குடும்பத்திலிருந்து நான் வந்து இருக்கிறேன். நான் அதிகமாகச் சாப்பிட மாட்டேன்'' என்றார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக 12 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடந்த நிலையில், முதலில் நேரம் குறிப்பிடாமல் வழக்கைத் தள்ளி வைக்கப்பட்டது. மேலும் இந்த மனுக்கள் மீதான விசாரணை நாளை முடிவடைந்து, காலை 10: 30 மணிக்குத் தீர்ப்பு வரும் எனக் கூறப்பட்டுள்ளது.