தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் - இன்றைய அப்டேட்ஸ்

நடப்பாண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த 6ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. நான்காம் நாளான இன்று நாளில் நடந்தவற்றை சுருக்கமாக தெரிந்து கொள்ளலாம்.


* பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், 2016 முதல் 2019ஆம் ஆண்டு வரை 295 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. குறைந்தபட்சம் 50 மாணவர்கள், 3 ஏக்கர் நிலம், ஒரு லட்ச ரூபாய் நிதி இருந்தால் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்றார்.

 

* கன்னியாகுமரியில் சுட்டுக் கொல்லப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் வில்சன் குடும்பத்தாருக்கு முதலமைச்சர் பழனிசாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். வில்சன் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் அளிக்கப்படும் என்று கூறினார்.